புதிய பாலம் கட்டித் தரப்படுமா…? கோரிக்கை விடுக்கும் பொதுமக்கள்…!!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூர் அருகே வடபாதிமங்கலத்தில் இருந்து புனவாசல் வழியாக திருவாரூர் செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் பஸ்கள், பள்ளி வாகனங்கள், மோட்டார் சைக்கிள், கார், வேன் மற்றும் லாரி உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் செல்கிறது. இந்நிலையில் புனவாசல் எனும் இடத்தில் சாலையின் குறுக்கே சனார் ஆறு செல்கிறது. இதன் காரணமாக அண்ணம் அரசினர் ஆற்றின் குறுக்கே 100 ஆண்டுகளுக்கு முன்பு குறுகலான பாலம் கட்டப்பட்டது.  தற்போது அந்த பாலம் பலம் குறைந்து காணப்படுகிறது. இந்த பாலம் குறுகலாக இருக்கின்ற காரணத்தினால் ஒரே ஒரு வாகனம் மட்டும் செல்ல முடிகிறது.

இதனால் எதிரேவரும் வாகனம் கடந்து சென்றுவர முடியாத நிலை இருக்கிறது. இதனால் அவசரமாக செல்லக்கூடிய 108 ஆம்புலன்ஸ், பள்ளி வாகனங்கள் பாலத்தை கடந்து சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது. அதனால் இந்த பாலத்தை அகற்றிவிட்டு அதே இடத்தில் அகலமான புதிய பாலம் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.