இது திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. மீண்டும் துருவ் நடிக்க இப்படம் ‘ஆதித்யா வர்மா’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டது . இப்படத்தை இயக்குனர் கிரிசய்யா இந்த இயக்கினார். இந்தியிலும் கபீர்சிங் என்ற பெயரில் அர்ஜுன் ரெட்டி படம் ரீமேக் செய்யபட்டது. கபீர் சிங் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் ஆதித்ய வர்மா படம் குறித்து எந்த தகவலும் வரவில்லை. இதனால் இப்படத்தை படக்குழுவினர் கைவிடபோவதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில் இந்த தகவலை படக்குழு மறுத்துள்ளது. ஆதித்ய வர்மா படத்தை கைவிடவில்லை என்றும், படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் பாடல் காட்சிக்காக படக்குழு போர்ச்சுக்கல் சென்றுள்ளது என்றும் தயாரிப்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.