கேரள மக்களுடன் எப்பொழுதும் துணை நிற்போம்…. கே.எஸ்.அழகிரி ஓணம் வாழ்த்து..!!

தமிழகத்தில் வாழும் மலையாள மொழி பேசும் கேரள மக்களுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி ஓணம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் 10 நாட்களாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை நாளை தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் மலையாள மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட மாவட்டங்களில் இப்பொழுதிருந்தே ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Image result for ks alagiri

இதை முன்னிட்டு இன்று நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் அத்திப்பூ கோலமிட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தி ஓனம் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. மேலும் ஓணம் பண்டிகைக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள சகோதர சகோதரிகளுக்கு தமிழக மக்கள் எப்பொழுதும் துணை நிற்பார்கள் என்று காங்கிரஸ்கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.