நாகை மாவட்ட வனவிலங்கு சரணாலயத்தில் தண்ணீர் தட்டுப்பாடு…!!

கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் வறட்சியை கட்டுப்படுத்தும் வகையில் டேங்கர் லாரி மூலம்  தண்ணீர் கொண்டுவரப்படுகிறது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் குதிரைகள்,மான்கள், குரங்கு உட்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. அப்பகுதியில் போதிய மழை இல்லாத காரணத்தால் அங்குள்ள நீர்நிலைகள் தற்போது வறட்சி அடைந்து காணப்படுகின்றது. .

இதனால் வறட்சியை கட்டுப்படுத்தும் வகையில் அதிகாரிகள்  டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீரை வரவழைத்து அங்குள்ள தொட்டிகளில் நிரம்புகின்றனர்.