எச்சரிக்கை….! குட்டிகளுடன் நடமாடும் காட்டு யானைகள்…. வனத்துறையினரின் அறிவுரை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் அடிக்கடி ஊருக்குள் நுழைந்து காட்டு யானைகள் உலா வருகிறது. இதே போல குட்டிகளுடன் சில காட்டு யானைகள் ஓவேலி, கிளன்வன்ஸ், ஜி.ஜி.டி, நாயக்கன்பாடி, ஹோப், அம்புலி மலை ஆகிய பகுதிகளில் முகாமிட்டுள்ளது. எனவே ஆரோட்டுபாறை, ஹோப், ஆத்தூர், காந்திநகர், அண்ணாநகர், நாயக்கன்பாடி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனையடுத்து காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்தால் 24 மணி நேர அவசர கால தொடர்பு எண்ணான 9487989499 அழைத்து புகார் அளிக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேபோல் பொதுமக்கள் வெளியே செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும் எனவும், தனியாக வெளியே நடந்து செல்லக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.