மணிமுத்தாறு அருவி சாலையில்…. குட்டியுடன் ஜோடியாக சென்ற காட்டு யானைகள்…. வைரலாகும் வீடியோ….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மணிமுத்தாறு அருவி உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளும் இருக்கிறது.

நேற்று மணிமுத்தாறு வன சோதனை சாவடியில் இருந்து அருவி செல்லும் சாலையில் குட்டிகளுடன் காட்டு யானைகள் உலா வந்தது. இரு யானைகள் ஜோடியாக குட்டியுடன் சென்றதை பார்த்த சுற்றுலா பயணிகள் செல்போனில் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.