திடுக்கிட்டு எழுந்த விவசாயி…. தூக்கி வீசிய காட்டு யானை…. கோவையில் பரபரப்பு…!!

காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள விராலியூர் பகுதியில் விவசாயியான சின்னச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனக்கு சொந்தமான தோட்டத்திற்கு சின்னசாமி இரவு நேரத்தில் காவலுக்காக சென்றுள்ளார். அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை சின்னசாமியின் தோட்டம் அமைந்துள்ள ஆட்டுக்காரன் கோவில் பகுதிக்கு வந்துள்ளது. இந்நிலையில் ஆட்கள் நடமாட்டம் இருப்பது போல் உணர்ந்ததால் திடுக்கிட்டு எழுந்த சின்னசாமியை அங்கு நின்று கொண்டிருந்த காட்டு யானை துதிக்கையால் தூக்கி வீசியதோடு ஆவேசமாக மிதித்து தாக்கியுள்ளது.

இது குறித்து அறிந்த தோட்டக்காரர்கள் ஒன்று சேர்ந்து காட்டு யானையை அங்கிருந்து விரட்டியடித்து, படுகாயமடைந்த சின்னசாமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே சின்னசாமி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *