இதுதான் காரணமா….? இறந்து கிடந்த காட்டு யானை…. வனத்துறையினரின் தீவிர விசாரணை…!!

15 வயது ஆண் காட்டு யானை வனப்பகுதிக்குள் இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வனத்துறையினர் சிறுமுகை வனச்சரகத்தில் உள்ள தேரன்  கிணறு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது புதுக்காடு வனப்பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது மிகவும் துர்நாற்றம் வீசியதால் அப்பகுதியில் வனத்துறையினர் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 15 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் காட்டு யானை இறந்து கிடந்ததை கண்ட வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தவுடன் அவர்கள் விரைந்து வந்து யானை உடலை பிரேத பரிசோதனை செய்து விட்டு மற்ற விலங்குகள் உண்பதற்காக அங்கேயே உடலை விட்டு விட்டனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, இறந்து கிடந்த யானையின் வயிறு மற்றும் சிறுகுடலில் உணவுப் பொருள் ஏதும் இல்லாததால் யானை உயிரிழந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.