நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர்- மேட்டுப்பாளையம் ரயில் பாதையில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் உலா வருகிறது. நேற்று குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் 3 காட்டு யானைகள் காட்டேரி அருகே சாலையைக் கடந்து வந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து யானைகள் காட்டேரி ரயில் பாதைக்கு சென்றது. அங்கிருந்து யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைய முயன்றது. இதனை பார்த்து வனத்துறையினர் 1 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். மேலும் காட்டு யானைகள் மீண்டும் ஊருக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.