கணவனைக் கொன்று விட்டு விபத்து என நாடகமாடிய மனைவி கள்ளக்காதலனுடன் கைது!!…

கள்ள காதலனுடன் வாழ ஆசைப்பட்டு சொந்த கணவனே மனைவியை கொலை செய்தது தருமபுரி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள கிராமத்தை  சேர்ந்தவர் மணி என்பவரது மகன் வெங்கடேசன் கட்டிட தொழிலாளியான இவர் முனியம்மாள் என்பவரை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்


இந்நிலையில் வெங்கடேசன் தனது மனைவி முனியம்மாளுடன் தனது மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார் . மாமியார் வீட்டில் விருந்து தனது வீட்டிற்கு புறப்பட்ட வெங்கடேசன், தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி சென்றார்

இந்நிலையில் சென்றுகொண்டிருந்த பாதி தூரத்திலேயே தலையில் பலத்த காயத்துடன் வெங்கடேசன் இறந்து கிடந்தார் இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வந்தனர் இதுகுறித்து அவரிடம் கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்

மோட்டார் சைக்கிளில் நானும் என் கணவரும் வருகிற பொழுது விபத்து ஏற்பட்டது அந்த விபத்தில் தலையில் கடுமையான காயம் ஏற்பட்டதால் அவர் அங்கேயே உயிரிழந்துவிட்டார் என்று காவல்துறையினரிடம் முனியம்மா கூறியுள்ளார்

இந்நிலையில் வெங்கடேசன் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தங்கை அருள் ஜோதி அவர்கள் மீண்டும் பாப்பரப்பட்டி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார் இதனையடுத்து தீவிர விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் முனியம்மாளிடம் மீண்டும் விசாரணை செய்துள்ளனர்

இந்த விசாரணையில் முனியம்மாள் அவரது பதில் காவல்துறைக்கு திருப்தி அளிக்காத நிலையில் மேலும் விசாரணையை மேற்கொண்டனர் இதில் திடுக்கிடும் தகவல் ஒன்று தெரியவந்துள்ளது இந்த விசாரணையில் அவர் கூறியதாவது

விஜய் என்பவரை திருமணத்திற்கு பிறகு காதலித்ததாகவும் அவருடன் மணமுடிக்க விரும்பியதாலும் வெங்கடேசன் அவர்களை கொலை செய்ய விஜய் முனியம்மா ஆகியோர் திட்டம் தீட்டியுள்ளனர்

இதனையடுத்து வெங்கடேசனுடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் பொழுது விஜய் அவர்களுக்கு தகவல் அளித்து  திட்டமிட்டு இரும்பு பைப்பால் தலையில்  அடித்து கொலை செய்துள்ளனர் பின் வெங்கடேசன் இறந்ததும் விபத்தில் இறந்ததாக நாடகமாடி உள்ளார் இது விசாரணைஇல் தெரியவந்ததை அடுத்து விஜய் மற்றும் முனியம்மா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்