திருமணமான 5 மாதங்களிலேயே கணவரை கல்லால் அடித்து கொலை செய்த மனைவி…..!!

தரங்கம்பாடி அருகே மனைவியும், அவரது மாமனாரும் சேர்ந்து கணவரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் தலச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஸ்குமாரும். இவர் அப்பராசபுத்தூரைச் சேர்ந்த கலைமதியை காதல் திருமணம் செய்துக்கொண்டனர். ஆனால் இவர்களுக்கு திருமணமான 5 மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த 14-ம் தேதி  தனது தந்தை வீட்டிற்கு சென்ற கலைமதி, பின் காவல்நிலையத்திற்கு சென்று தனது கணவருடன் வாழவிரும்பவில்லை எனப் புகார் அளித்துள்ளார். இதனிடையே கலைமதியின் கணவர் டீசல் வாங்குவதற்காக தனது மனைவியின் ஊரான அப்பராசபுத்தூருக்கு சென்றுள்ளார்.

அப்போது சதீஸ்குமாரை பார்த்த கலைமதி கல்லால் அடித்ததாக கூறப்படுகிறது. பின்பு அங்கு வந்த சதீஸ்குமாரின் மாமனார் நாகராஜ், சதீஸை சரமாரியாக தாக்கியுள்ளார். இதையடுத்து சதீஸ்குமாரை மீட்ட பொதுமக்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சதீஸ்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து மனைவி கலைமதி மற்றும் மாமனார் நாகராஜ் ஆகியோரை காவல் துறையினர் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.