“கணவனை கொன்று நாடகமாடிய மனைவி “தேனியில் பரபரப்பு..!!

மொய் பணத்தை செலவு செய்ததால் மனைவி கணவனை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

தேனி மாவட்டம் கொத்தப்பட்டி கிராமத்தின் மயானப் பகுதியில் அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி அய்யனார் உடலில் காயங்களுடன் சடலமாக கடந்த மார்ச் 12 ஆம் தேதி மீட்கப்பட்டார் .

இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் ஒன்று கிடைத்துள்ளது அதில் , திருமணத்தில் வந்த மொய் பணத்தை வீணாக செலவு செய்ததால் அவரது மனைவியே அவரை கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.