2-வது மனைவியை மின்சாரம் பாய்ச்சி கொன்ற கணவர்….. சென்னையில் பயங்கர சம்பவம்….!!!

2-வது மனைவியின் உடலில் கணவர் மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள காத்பாடா பகுதியில் ஷாஜகான்(48) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் தோல் கடையில் தையல்காரராக பணிபுரிந்து வருகிறார் b இவரது முதல் மனைவி இறந்து விட்டதால் கடந்த 2016-ஆம் ஆண்டு ஹசினாபேகம்(37) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். கடந்த 28-ஆம் தேதி காலை ஹசினாபேகம் படுக்கையறையில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஹசினா பேகத்தின் உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் உடலில் மின்சாரம் பாய்ந்ததால் ஹசினாபேகம் இறந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து போலீசார் ஷாஜகானை பிடித்து விசாரித்த போது திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த ஷாஜகான் தனது மனைவி தூங்கிய பிறகு முகத்தில் தலையணையை வைத்து அமுக்கியுள்ளார். பின்னர் அவரது உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொலை செய்து படுக்கையிலேயே இறந்த கிடைப்பதாக நாடகமாடியது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.