என்னால தனியா இருக்க முடியல…!! கை குழந்தையுடன் பெண் எடுத்த விபரீத முடிவு… கடலூரில் நடந்த சோகம்…!!

கைக் குழந்தையுடன் தாய் அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்திலுள்ள திட்டக்குடி பகுதியில் ரவிராஜ் என்ற சாப்ட்வேர் இன்ஜினியர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ரவிராஜாவிற்கும் சத்யா என்ற பெண்ணிற்கும் திருமணம் நடந்து ஒரு மகள் இருந்துள்ளார். இதனையடுத்து ரவிராஜா தனது குடும்பத்துடன் மலேசியாவில் வசித்து வந்துள்ளார். மேலும் ரவிராஜா வேலை காரணமாக தனது மனைவி மற்றும் குழந்தையை தனியாக வீட்டில் வைத்து விட்டு சென்றுள்ளார்.

எனவே தனிமையிலிருந்து வந்த சத்யா மன உளைச்சலுக்கு ஆளாகி தனது குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். அதன்படி தனது கணவர் ரவிராஜாவிற்கு செல்போன் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு தனது குழந்தையுடன் தான் வசிக்கும் குடியிருப்பின் அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். அதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.

இதனையடுத்து இது குறித்து ரவி ராஜாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் இது குறித்து தகவலறிந்த ரவி ராஜாவின்  உடல்நிலையும் மிகவும் மோசமாயுள்ளது. எனவே ரவிராஜாவை மருத்துவமனையில் அனுமதித்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிகிச்சை பலனின்றி ரவி ராஜாவும் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *