சமூக வலைத்தளத்தில் தம்பதியின் சண்டை இணையதளத்தில் வைரலாகி வருகிறது. உங்கள் மனைவி தங்கும் விடுதியில் ஒருவரிடம் உள்ளார் என தகவலின் அடிப்படையில் கணவர் பிரகாஷ் தங்கும் விடுதிக்கு செல்வதற்கு முன் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவில் குறிப்பிட்ட உள்ளதாவது, கட்டில் மேல் ஜாலியாக ஸ்வீட் சாப்பிடும் தன் மனைவியைக் கண்டு கோபம் அடைந்தார் உள்ளே நுழைந்தவுடன் நீ இங்கே என்ன செய்கிறாய்? எப்படி வந்தாய்? யாருடன் வந்தாய்? என அடுக்கடுக்காக கேள்வியை முன் வைத்தார் தன் கணவரை கண்ட மனைவி மிக ஆச்சரியத்துடன் பிரகாஷ் நீங்க எப்படி வந்தீங்க? யார் உங்களுக்கு சொன்னா? முதலில் சத்தமாக பேசாதீங்க வெளிய போங்க என சிறிதும் குற்ற உணர்வு இல்லாமல் பதில் அளித்துள்ளார்.

ஆனால் கணவர் பிரகாஷ் கோபத்துடன் தொடர்ந்து தன் கேள்வியை முன்வைத்தார் நீ இங்க யாருடன் வந்தாய் உன் ஆண் நண்பர் யார்? இது யாருடைய செருப்பு என அறை முழுவதும் அந்த நபரை தேடி உள்ளார். மனைவி நான் யாருடனும் வருவேன் உனக்கு என்ன முதலில் நீ எப்படி இங்கு வந்தாய் தன் கணவரிடம் கேள்வி கேட்டார் அதற்கு அவர் நான் இங்கு வேலை விஷயமாக வந்தேன் என்றார். மனைவி ஓ அப்படியா சரி முதலில் வெளியே போ என ஆக்ரோஷமாக கூறி தன் கணவரே வெளியே தள்ளும் முயற்சியிலே அவர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். அந்த ஆண் நண்பருக்கு நல்ல நேரம் போல அந்த நேரத்தில் தங்கும் விடுதியில் இல்லை.

இந்த வீடியோ இணையத்தில் வெளியான பின்பு, திருமணம் என்பது புனிதமானது அந்த புனிதமான உறவை இப்படி துரோகம் படுத்த கூடாது. திருமண வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் அதை முறைப்படி கூறி விலக வேண்டும் அவர்களை நம்ப வைத்து எத்தனை நாள் ஏமாத்த முடியும் என பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.