இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜமைக்காவின் கிங்ஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்கள் எடுத்தது. அதன்பின் தனது முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 47.1 ஓவர்களில் 117 ரன்களுக்கு சுருண்டு ‘பாலோ-ஆன்’ பெற்றது.

மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ‘பாலோ-ஆன்’ வழங்காமல் 299 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 54.4 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 168 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. 468 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியினரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 210 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இறுதியில் இந்திய அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற புள்ளியில் வென்று கோப்பையை கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக ஹனுமன் விஹாரி தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம், டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிபெற்ற கேப்டனான தோனியின் (27 வெற்றி) முந்தைய சாதனையை, கோஹ்லி (28 வெற்றி) முறியடித்துள்ளார்.