சர்வதேச எழுத்தறிவு தினம் ஏன் கொண்டாடப்படுகிறது…?

செப்டம்பர் 8-ஆம் தேதி ஏன் சர்வதேச எழுத்தறிவு தினத்தை நாம் கொண்டாடுகின்றோம்.

கல்வியறிவு குறித்த மனித கவனத்தை ஊக்குவிப்பதற்கும் சமூக மற்றும் மனித வளர்ச்சிக்கான  உரிமைகளை அறிந்து கொள்வதற்கும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. ஒருவர் உணவு , உடை , இருப்பிடம் அனைத்தையும் முழுமையாக பெற்று நிம்மதியான வாழ்வுக்கு கல்வியறிவு முக்கியம். வறுமையை ஒழிப்பதற்கும், குழந்தை இறப்பைக் குறைப்பதற்கும், மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கும், பாலின சமத்துவத்தை அடைவதற்கும் இது ஒரு அவசியமான கருவியாகும்.

கல்வியறிவு ஒரு குடும்ப நிலையை உயர்த்தும் திறனைக் கொண்டுள்ளது. எனவே, தொடர்ச்சியான கல்வியைப் பெறுவதற்கு மக்களை ஊக்குவிப்பதற்கும், குடும்பம், சமூகம் மற்றும் நாட்டிற்கான அவர்களின் பொறுப்பைப் புரிந்துகொள்வதற்கும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.உலகளாவிய கல்வியறிவை மேம்படுத்துவதில் மற்றும் அரசாங்கங்கள், சமூகங்கள் போன்றவற்றுடன் சர்வதேச எழுத்தறிவு தினத்தை ஊக்குவிப்பதில் யுனெஸ்கோ தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது. மாறிவரும் உலகின் சூழலில் கல்வியறிவு மற்றும் திறன் மேம்பாட்டின் பங்கை எடுத்துக்காட்டுவதை நோக்கமாக இந்த தினம் அனுசரிக்க படுகின்றது.