கொரோனா இருக்க பயம் ஏன் ? குஷியை ஏற்படுத்திய தங்கம்…. உயர வாய்ப்பில்லை ..!!

இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளநிலையில் மேலும் குறைய வாய்ப்பிருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

இந்த ஆண்டு தொடக்கம் முதலே கிடுகிடுவென உயர்ந்து வந்த தங்கத்தின் விலை கடந்த 2 நாளாக மளமளவென சரிந்து வருகிறது. இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு  சவரன் 33 ஆயிரத்து 256க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று மாலை நிலவரப்படி சவரனுக்கு 1,152 ரூபாய் குறைந்துரூ 32, 104 ரூபாய்க்கு விற்பனையானது.இந்த நிலையில்தான் இன்று இரண்டாவது நாளாகவும் தங்கத்தின் விலை மேலும் சரிந்திருக்கிறது.

ஒரு கிராமுக்கு ரூ 79 குறைந்து ஒரு சவரனுக்கு 632 ரூபாய் தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது. இதனால் தற்போதைய ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை 31 ஆயிரத்து 472 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மளமளவென உயர்ந்த தங்கத்தின் விலை தற்போது அடுத்தடுத்து சரிந்து வரும் காரணமாக தங்கம் வாங்கக் கூடியவர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.

சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு குறைந்து இருப்பதே இந்த விலை சரிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதற்கு முக்கியமான காரணம் கொரோனா வைரஸ் பாதிப்பு தான். பெரும்பாலான நாடுகள் பிற நாடுகளில் இருந்து தான் தங்கத்தை இறக்குமதி செய்கின்றன. ஆனால் தங்கம் இறக்குமதி என்பது கொரோனா வைரஸ் காரணமாக அடியோடு நிறுத்தப்பட்டது.இதன் காரணமாகத்தான் தங்கத்தின் விலை சரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் பங்குச் சந்தை வீழ்ச்சி , ரூபாயின் வீழ்ச்சி போன்றவையும் தங்கத்தின் விலை குறைய காரணமாக பொருளாதாரம் நிபுணர்கள் தெரிவித்து இருக்கின்றனர். கொரோனா வைரஸ் தினமும் ஒவ்வொரு நாடுகளுக்கும் பரவிக் கொண்டே இருக்கின்றது.இந்த கொரோனா வைரஸ் ஒரு முடிவுக்கு வராத வரையில் தங்கத்தின் விலை ஏறுவதற்கு வாய்ப்பே இல்லை.  அடுத்துவரும் தினங்களிலும் தங்கத்தின் விலை குறைந்தே இருக்கும் என்று நகைக்கடை அதிபர்களும் தெரிவிக்கின்றனர்.

அந்த வகையில் தான் கடந்த இரண்டு நாளில் மட்டும் ஒரு சவரனுக்கு 1,784 ரூபாய் குறைந்து இருக்கிறது. அதாவது நேற்று 1,152 ரூபாய்யும் , இன்று 632 ரூபாய்யும் ஒரு சவரனுக்கு குறைந்ததன் மூலம் இரண்டு நாளில் மட்டும் ஒரு சவரனுக்கு 1,784 ரூபாய் சரிந்திருக்கிறது. இது அடுத்த சில நாட்களுக்கு தொடரவே வாய்ப்பிருக்கிறது. கொரோனா வைரஸ்சுக்கு ஒரு நிரந்தர கிடைக்காத வரையில் தங்கத்தின் விலை மேலும் சரிய வாய்ப்பு இருப்பதாகவே பொருளாதார வல்லுனர்கள் கணிக்கின்றனர்.