ரஜினியை பார்த்துDMK பயப்படுவது ஏன்.. சீறிய அண்ணாமலை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எந்த அளவிற்கு தமிழகத்தில் நம்முடைய அரசியல்வாதிகள் மாறி இருக்கிறார்கள் என்று பாருங்கள். வீடு தோறும் தேசிய கொடியை ஏற்றுங்கள் என்ற பாரத பிரதமர் சொல்லுகின்றார், அதை தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் தலைவர் ஒருவர் அது கார்ப்பரேட் கொள்கையை திணிப்பதற்கான முயற்சி என்று,

சொல்கின்றார். அந்த அளவிற்கு அவர்களுடைய அரசியல் கீழ் தரமாக, மிகவும் பிற்போக்கு தனமாக, எதற்காக அரசியல் செய்கின்றோம் என்பதை மறந்து விட்டு, ஜாதிகளை கைதியில் பிடித்துக் கொண்டு,  அரசியல் செய்யக்கூடிய தலைவர்கள் மட்டும்தான் இப்படி யோசிப்பார்கள்.

75 ஆண்டு காலம்  ஆகிறது. நமக்கு சுதந்திர தின இன்ப பெருவிழா நமக்கு 75 ஆவது ஆண்டு.  இதை ஒருவர் இந்தியனும் கூட மகிழ்ச்சியாக, உணர்ச்சி பூர்வமாக தன்னுடைய நாடு முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை பெருமிதமாக கொண்டாடுவதற்காக,  தேசிய கொடியை நம் இல்லத்தில் ஏற்றுகின்றோம்.

உதாரணத்திற்கு நம்முடைய கட்சி அலுவலகத்தில் ஏற்றக்கூடிய தேசியக்கொடி ஜம்மு – காஷ்மீரில் நெய்யப்பட்ட தேசிய கொடியை வரவழைத்து இருக்கின்றோம். அங்கிருந்து வர வழைக்கப்பட்டு அதுதான் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் 15ஆம் தேதி காலையில் ஏற்றி வைக்கப்படும். அங்கு இருக்கக்கூடிய சிறு உதவி குழுவினுடைய கொடியை நாம் ஏற்ற போகிறோம்.

கம்யூனிஸ்ட்காரர்களுக்கு வேலை இல்லை. திமுக கொடுக்கக்கூடிய ஆக்சிஜன் சிலிண்டர்களை கையிலே சுமந்து கொண்டு, அதை முக்குல வைத்துக்கொண்டு உயிரோடு சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு அரசியல் என்றாலே, ஓஹகோ  நம்மளைப் பற்றி தவறாக கூறியிருப்பார்கள் என்று, குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும், ஊழல் செய்தவர்களுக்கு குறுகுறுக்கும். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். யாரெல்லாம் அரசியலில் தப்பு செய்துள்ளார்களோ,  அவர்கள்தான் முதலில் பேசுகிறார்கள்.

அய்யோ ரஜினி அவர்கள் நம்மளை பற்றி பேசி இருப்பாரா என்று..  உங்களுக்கு ஏன் பயம். நீங்க நல்ல அரசியல் செய்தால் ரஜினி அவர்கள் ஏன் உங்களைப் பற்றி பேச போகிறார். அதனால் ரஜினி அவர்கள் அரசியல் பேசியதில் எந்த தவறும் இல்லை, ரஜினி அவர்கள் ஆளுநரை சந்தித்ததும் எந்த தவறும் இல்லை, ஆளுநர் அவர்கள் சாதாரண மனிதர்களையும் சந்திக்கின்றார். இது எல்லாம் பேசுவதற்கு திமுகவிற்கு எந்த உரிமையும் கிடையாது என விமர்சித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *