நடிகர்கள் அரசியலில் குதிப்பது ஏன்..??, ரஜினிக்கு சீமான் அறிவுரை ..!!

மோடி வெற்றிக்கு கருத்து தெரிவித்த ரஜினிக்கு சீமான் அறிவுரை குறித்து தற்போழுது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது .

மக்களுக்காக எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளாத நடிகர்கள் அரசியலில் குறிப்பதற்கான காரணம் என்ன என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மற்ற மாநிலங்களை காட்டிலும் திரைப்படத்தின் மீதும் அதில் நடிக்கக்கூடிய கதாநாயகர்கள் மீதுமான கவர்ச்சி தமிழ்நாட்டில் தான் அதிகமாக உள்ளது.

ஆகையால் கட்சி தொடங்கிய உடன் ஏராளமான மக்கள் நடிகர்களின் பின் சென்று ஏமாந்துவிடுகிறார்கள். இதனால் மக்களுக்காக போராட கூடிய அரசியல் தலைவர்கள் மக்களால் திரும்பி பார்க்கப்படுவதில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும் கட்சி தொடங்கிய உடன் கருத்து கூறுவேன் என்று கூறிய ரஜினி மோடியின் வெற்றிக்கு கருத்து பதிவு செய்தது ஏன்? என்று கேள்வி எழுப்பியதுடன்  மக்களவைத் தேர்தல் நேர்மையுடன் தான் நடைபெற்றதா? என்று சிந்தித்துப் பாருங்கள் என்று ரஜினிக்கு சீமான் அறிவுரை கூறியுள்ளார்