யார் பெஸ்ட் ? Jio Fiber ஆ…. Airtel ஆ…. BSNL ஆ….. ப்ராட்பேண்ட் திட்டத்தின் ஒப்பீடு..!!

Jio Fiber vs Airtel vs BSNL ஆகிய ப்ராட்பேண்ட் திட்டங்களின் ஓர் ஒப்பீடு அனைத்து பயனாளர்களையும் கவர்ந்துள்ளது.

தொலைத்தொடர்பு துறையில் வேகமாக வளர்ந்து வரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிவேக ப்ராட்பேண்ட் சேவையான ஜியோ பைபர் சேவையை ரூ 699_க்கு இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதனுடன் பல சலுகைகளுடன் சேர்த்து இணைய சேவையை வழங்குகின்றது. ஜியோ பைபர் 1Gbps வரையிலான அதிவேக இணைய சேவையை வழங்குகிறது.

Jio Fiber திட்டம் : 

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பைபர் சேவையை ஆறு ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.அதில் , வெண்கலம் மாதத்திற்கு ரூ. 699 , வெள்ளி மாதத்திற்கு ரூ .849 , தங்கம் மாதத்திற்கு ரூ. 1,299, டயமண்ட் ரூ. மாதம் 2,499 பிளாட்டினம்  மாதத்திற்கு ரூ .3,999 , மற்றும் டைட்டானியம் மாதத்திற்கு ரூ .8,499 என்று 6 வகை திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜியோ ஃபைபர் திட்டத்தில் வெண்கலம் மற்றும் வெள்ளி பேக்  100Mbps தங்கம் பேக் 250Mbps  ,வைர பேக்  500Mbps ,  பிளாட்டினம் மற்றும் டைட்டானியம்பேக் 1Gbps  டெட்டா வேகத்தை கொடுக்கும். இந்த திட்டங்கள் மாதம் ,  3 மாத, 6 மாத மற்றும் 12 மாத  கால அளவை கொண்டு அறிமுகம்  செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டம் ஒவ்வொன்றும் வரம்பற்ற தரவு பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றத்துடன் இருக்குமென ஜியோ  நிறுவனம் தெரிவித்துள்ளது. இருந்தாலும் இதில்  ஒரு FUP இருக்கும், இதன்  வரம்பு 100GBயை அடிப்படையாக கொண்டு வெண்கலத் திட்டத்திலிருந்து தொடங்கி, 5000GB வரை டாப்-எண்ட் டைட்டானியம் திட்டம் வரை இருக்கும்.இந்த திட்டத்தைப் பொறுத்து தொடக்கத்தில் 250 ஜிபி வரை இலவச கூடுதல் தரவை ஜியோ வழங்கவுள்ளது.

ஏர்டெல் பைபர் திட்டம் :

ஏர்டெல் V-பைபர் பிராட்பேண்ட் திட்டம் இந்தியாவில் 100Mbps_க்கு அதிகமான இணைய வேகத்தை வழங்குகிறது. ஏர்டெல்லின் முதல் பிராட்பேண்ட் திட்டமான என்டர்டெயின்மென்ட் திட்டத்தின் விலை ரூ. 1,099. இது 300GB டேட்டாவை 100Mbps வரை வேகமாக வழங்கும். மேலும் வரம்பற்ற உள்ளூர், எஸ்.டி.டி அழைப்புகள் ஆகியவற்றை வழங்குகின்றது.

இதையடுத்து ரூ 1599_க்கு கிடைக்கு ஏர்டெல் பிரீமியம் பிராட்பேண்ட் திட்டத்தில் 600GB டேட்டா, 300Mbps வரை வேகம், வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி அழைப்புகளை  ஏர்டெல் வழங்குகின்றது. இறுதியாக 1,999 ரூபாய்க்கான ஏர்டெல் விஐபி பிராட்பேண்ட் திட்டத்தில் 100Mbps வேகத்தில் வரம்பற்ற டேட்டா பயன்பாடு,  உள்ளூர்  , எஸ்.டி.டி அழைப்புகள் கிடைக்கின்றது.

BSNL பாரத் பைபர் : 

மாதத்திற்கு ரூ 777_யில் இருந்து பி.எஸ்.என்.எல்-ன் அதிவேக பிராட்பேண்ட் திட்டங்கள் தொடங்குகின்றது. இது 50Mbps இணைய வேகம் மற்றும் 500GB டேட்டா_வை BSNL பயனாளர்களுக்கு கொடுக்கின்றது.வரம்பை மீறி டேட்டாவை பயன்படுத்தும் போது அதன் இணைய வேகம் 2Mbps ஆக குறைக்கப்படும்.அதே போல ரூ.849 திட்டத்தில்  50Mbps வேகம் ,  600GB டேட்டா அளவைவும் ,  ரூ.1,277 திட்டத்தில் 100Mbps வேகம் , 750GB வரை டேட்டா அளவையும் ,  ரூ. 2,499 மாதாந்திர திட்டத்தில் 100Mbps வேகம், ஒரு நாளைக்கு 40GB வரை டேட்டாவை BSNL வழங்குகின்றது.

அதே போல ரூ. 4,499 மற்றும் ரூ. 5,999 திட்டத்தில்  100Mbps இன்டர்நெட் வேகம், ஒரு நாளைக்கு 55GB மற்றும் 80GB டேட்டா_வையும் , ரூ.9,999 திட்டத்தில் 100Mbps இணைய வேகம் ,  ஒரு நாளைக்கு 120GB டேட்டாவை வழங்கி அது குறிப்பிட்ட டேட்டா வரம்பை அடைந்த பிறகு இணைய வேகம் 8Mbps ஆக குறைக்கப்பட்டது. BSNL_லின் கடைசியாக பேக் ரூ.16,999 திட்டத்தில் 100Mbps வேகம், ஒரு நாளைக்கு 170GB டேட்டா_வை வழங்கி  அதன் தரவு வரம்பை அடைந்த பிறகு 10Mbps வேகத்தை வழங்குகின்றது.