இறுதி போட்டிக்கு முன்னேற போவது யார் ..?ஆஸ்திரேலியா இங்கிலாந்து நாளை மோதல்…!!

உலக கோப்பை  தொடரின்   2 வது  அரை இறுதி போட்டி நாளை aus – eng அணிகளுக்கு இடையே  நடைபெற இருக்கிறது 

நடை  பெற்று வரும்  உலகக்கோப்பை  கிரிக்கெட் தொடரின்  2- வது அரை இறுதி ஆட்டம் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நாளை  மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. இதில் ஆஸ்திரேலியா மற்றும்  இங்கிலாந்து அணிகள் மோத  உள்ளன .ஆஸ்திரேலியா  அணி ஏற்கனவே 7 முறை  உலக கோப்பை இறுதி  சுற்றுக்கு   சென்று,5 முறை உலக  கோப்பையை வென்று உள்ளது .

Image result for australia england

அதைபோல் இங்கிலாந்து  அணி இது வரை 3முறை இறுதி சுற்றுக்கு  சென்று ஒரு முறை கூட வெற்றி பெறவில்லை . கிரிக்கெட் வரலாற்றில் இநதியா -பாகிஸ்தான் போல் இங்கிலாந்து -ஆஸ்திரேலியா பரம்பரை எதிரியாக  விளையாடி  வருகின்றனர் .  ஆகவே நாளை நடை பெற இருக்கும் அரை இறுதி போட்டிக்கு இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில்  ஈடுபட்டு  வருகின்றனர் .எனவே  இந்த போட்டியில் எந்த அணி வெற்றி  பெற்று இறுதி சுற்றுக்கு செல்லும் என்ற எதிர்பார்ப்பு  கிரிக்கெட் ரசிகர்கள்   இடையே ஏற்பட்டுள்ளது   .