விஜயின் ‘தளபதி66’…. இயக்கப் போவது யார் தெரியுமா…? வெளியான மாஸ் தகவல்…!!!

விஜய்யின் ‘தளபதி66’ திரைப்படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து தளபதி65  திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக விஜய் தற்போது ஜார்ஜியா சென்றுள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

இந்நிலையில் தளபதி65 திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் தளபதி66 படத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதன்படி தளபதி66 படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாகவும் மைத்திரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு கூறிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *