குக் வித் கோமாளி சீசன் 2 டைட்டில் வின்னர் யார் தெரியுமா…? வெளியான சூப்பர் தகவல்…!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் டைட்டிலை வெல்வது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மாபெரும் வெற்றியைப் பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியின் முதல் சீசனில் பிரபல நடிகை வனிதா விஜயகுமார் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து தற்போது குக்  வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி அடுத்த வாரம் இறுதிச்சுற்று காண போட்டி நடைபெற உள்ளது. இதில் கனி, ஷகிலா, பாபா பாஸ்கர், அஸ்வின்,பவித்ரா  ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இந்த எபிசோட் தொடர்ந்து 5 மணி நேரம் ஒளிபரப்பாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இறுதிப்போட்டிக்கான படப்பிடிப்பு இன்று முடிந்துள்ள நிலையில் குக் வித் கோமாளி சீசன் 2வின் வெற்றியாளர் யார் என்ற தகவல் வெளியில் கசிந்துள்ளது. அதன்படி நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை முழு முயற்சியுடன் ஈடுபட்டுவரும் கனி தான் இந்த சீசனுக்கான டைட்டிலை தட்டி செல்கிறார். இந்த எபிசோடுகளை காண்பதற்கு ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.