யார் சூப்பர்ஸ்டார்…. விஜய்க்கு அம்மா….. அஜித்துக்கு திரிஷா… மோதிக் கொள்ளும் ரசிகர்கள்…!!

விஜய் vs அஜித் யார் சூப்பர்ஸ்டார் என்ற விவாதம் சமூக வலைதளத்தை ஆக்கிரமித்துள்ளது.

தமில் திரையுலகில் முன்னணி நடிகர்களாக விளங்குபவர்கள் விஜய், அஜித். இவர்களின் ரசிகர்கள் எலியும் , பூனையும் போன்று எப்போதும் விஜய் , அஜித்_க்காக சண்டை செய்து கொண்டே இருப்பார்கள். இவர்களின் சண்டையை நாம் சமூக வலைதளத்தில் பார்க்கலாம். அஜிதோ , விஜய்யோ ஏதேனும் படம் நடிக்க போவதாக தகவல் வந்தாலே இவர்களின் சண்டை தொடங்கி விடும். பின்னர் படம் வெற்றி , தோல்வி என வசூல் வேட்டை வரை நீடிக்கும்.

சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜீத் மற்றும் விஜய் ரசிகர்களுக்குள் நேற்று ஒரு புதிய வடிவிலான சண்டை உருவாகியுள்ளது. அதாவது நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா  விஜய்க்கு எழுதியுள்ள வாழ்த்து கடிதத்தில் , எம்.கே.தியாகராஜ பாகவதர், எம்.ஜி.ராமச்சந்திரன், ரஜினிகாந்த் வரிசையில் அடுத்த சூப்பர் ஸ்டாராக உன்னை உலகமே கொண்டாட காத்திருக்கின்றது. உன்னுடைய தாய் என்பதெல்லாம் மறந்து ரசிகர்களுடன் கூட்டத்தோடு கூட்டமாய் நானும் அடிக்கிறேன் ஒரு நீண்ட பிகில்.என்று அந்த கடிதத்தை முடித்திருந்தார்.

இது விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியதோடு சமூக வலைத்தளத்திலும் இந்த கடிதம் வைரலாகி ரசிகர்களின் சண்டை தொடங்கியது. அதே வேளையில் சென்னையில் நடந்த  யுனிசெப் கூட்டத்தில் நடிகை திரிஷா  கல்லுரி மாணவிகளிடம் உரையாடினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திரிஷா ,  நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை மாதிரியான படத்தில் நடித்தது பாராட்டுக்குரியது.அஜித் ஒரு சூப்பர் ஸ்டார் என்று புகழ்ந்தார். இதை அஜித் ரசிகர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதால் சமூக வலைதள மோதல் நீடிக்க தொடங்கியது.