யார் தலைமையில் ஆட்சி..? “மே 23_ஆம் தேதி ஆலோசனை” சோனியா அழைப்பு….!!

நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 7 கட்டமாக நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவின் 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் , கடைசி மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு மே 19_ஆம் நடைபெற இருக்கின்றது. இந்தியா முழுவதும் பதிவான வாக்குகள்  அனைத்தும் வருகின்ற மே 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். மத்தியில் ஆட்சியமைக்க எந்த தேசிய கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும் , மாநில கட்சிகளின் உதவியுடன் கூட்டணி ஆட்சி அமைக்க முடியுமென்று  தேர்தல் தொடங்குவதற்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்தன.

மத்தியில் ஆளும் பிஜேபி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளவும் , காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுடன் மக்களவைத் தேர்தலின் முடிவுகள் வெளியாகும் அன்று ஆலோசனை நடத்த கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கு தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளார். மேலும் இந்த அழைப்பில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறாத மாநில கட்சிகளான பிஜூ ஜனதாதளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சித் தலைவர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *