துரோகத்தின் மொத்த வடிவம் யார்…? மல்லுக்கட்டும் இபிஎஸ், செந்தில் பாலாஜி…. பரபரப்பு பேட்டி…!!!

தமிழ்நாடு சட்டசபையில் நேற்று வேளாண்மை பட்ஜெட் தாக்கல் நடைபெற்றது. அதன் பிறகு எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, தமிழக விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் பெரிய திட்டங்கள் எதுவும் இல்லை. செந்தில் பாலாஜி என்னை துரோகத்தின் மொத்த வடிவம் என்று குறிப்பிட்டு பேசியுள்ளார். அவர்தான் துரோகத்தின் மொத்த வடிவம்.

இதுவரை எத்தனை கட்சிகளுக்கு மாறியுள்ளார். அவர் போகிற கட்சிகளுக்கு எல்லாம் துரோகம் விளைவித்தவர். கடந்த 1974-ம் ஆண்டு நான் அதிமுகவில் சேர்ந்தேன். இதுவரை நான் அதிமுக கட்சியில் மட்டும்தான் இருக்கிறேன். திமுக கட்சியில் பேட்டி கொடுப்பதற்கு அமைச்சர்களே கிடையாதா.?. அந்தக் கட்சிக்காக 50 முதல் 60 ஆண்டு காலம் வரை உழைத்தவர்கள் எல்லாம் இருக்கும்போது துரோகம் மூலம் பொறுப்புக்கு வந்தவர் செந்தில் பாலாஜி என்று கூறியுள்ளார்.