விஜய்யை எதிர்த்து நிற்கும் கார்த்தி , விஜய் சேதுபதி ஜெயிக்கப்போவது யார் ?

கார்த்தி நடித்து வரும் “கைதி படத்தின்” ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள  படம்  கைதி. இப்படத்தில் ஹீரோயின் கதாபாத்திரம் கிடையாது . மேலும் , முக்கிய கதாபாத்திரத்தில் நரேன் நடித்துள்ளார். இந்நிலையில் , , ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சாம்.சி.எஸ் அவர்கள் இசையமைத்துள்ளார்.

Image result for PIKIL VS KAITHI

மேலும் , ஒரு இரவில் நடக்கும் சம்பவத்தை ஆக்‌ஷன் திரில்லராக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின்  டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற்றுள்ளது . இந்நிலையில், இப்படத்தின்  ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.  இப்படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது .

Image result for kaithi

குறிப்பாக, தீபாவளிக்கு விஜய்-அட்லீ கூட்டணியில் உருவாகியிருக்கும்  பிகில் படமும் , விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் படமும்  வெளியாக உள்ள நிலையில் , இப்படங்களுக்கு  போட்டியாக கைதி படமும் ரிலீசாக உள்ளது . இதனால் பாக்ஸ் ஆபிஸில் எந்த படம் முன்னிலை பெரும் என எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது  .