“கோவிலுக்கு பெண்கள் போகக்கூடாதுனு எந்த சாமி சொல்லுச்சு”.. ஐஸ்வர்யா ராஜேஷ் விளாசல்..!!!

செய்தியாளர்களை சந்தித்த ஐஸ்வர்யா ராஜேஷ்,  கடவுள் எல்லோருக்கும் ஒன்றுதானே. ஆண்-பெண் என்ற வித்தியாசம் கிடையாது. எந்த கடவுளுமே என் கோவிலுக்கு இவங்க வரக்கூடாது, அவங்க வரக்கூடாது என எந்த கடவுளும் கூறியது கிடையாது. இது நம்மளே உருவாக்கிய சில சட்டங்கள் தான். எந்த கடவுள் சொல்லி இருக்காங்க? நீங்க சொல்லுங்களே..? ஏதாவது கடவுள் சொல்லி இருக்காரா? சபரிமலை என குறிப்பிட்டு கூறவில்லை.

எந்த கோவிலிலோ அல்லது எந்த கடவுளோ இப்படி பண்ணக்கூடாது என சட்டம் வச்சது கிடையாது. இது சாப்பிடக்கூடாது, இது பண்ண கூடாது, இது தான் தீட்டு என நிறைய விஷயங்கள் யாருமே வைத்தது கிடையாது. இது நம்மளே உருவாக்கியதுதான். இது கடவுளுக்கு சம்பந்தமானது கிடையாது என நான் சொல்கிறேன். கோவிலில் பெண்கள் தான் அம்மனாக இருக்கிறார்கள்.

நான் க/பெ ரணசிங்கம் என்ற ஒரு படம் பண்ணியிருக்கின்றேன். அதில் தங்கை கதாபாத்திரத்தில் மாதவிடாய் நேரத்தில் உணவு சமைக்காமல் வீட்டில் உட்கார்ந்து இருப்பாங்க. அப்ப நான் ஒரு டயலாக் சொல்லி இருப்பேன். எந்த கடவுளுமே தீட்டு, கோவிலுக்கு வரக்கூடாது, அங்க போக கூடாது, இங்க போக கூடாது என சொன்னதே கிடையாது. இது நம்மளே உருவாக்கியது தான். இது மக்கள் நம்புகின்ற ஒரு விஷயம் தான். கடவுள் எந்த சட்டமும் வைக்கவில்லை. நான் எப்பவும் இதை நம்புவது கிடையாது என கூறியுள்ளார்.

Leave a Reply