நடிகர் மாதவன் கொரோனா வைரஸ் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸ் குறித்து பல்வேறு பிரபலங்கள் கருத்து தெரிவித்து வரும் சூழ்நிலையில், நடிகர் மாதவன் ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் கொரோனோ வைரஸ் அச்சம் காரணமாக ப்ளாக் டவுன் என்ற பெயரில் பொதுமக்கள் அவரவர் வீட்டினுள் முடங்கிக் கிடக்கும் சூழ்நிலை உலகெங்கும் ஏற்பட்டு உள்ளது. அந்த வகையில், அமெரிக்காவின் வெனிசுலா நகரத்தில் மக்கள் வீட்டுக்குள் முடங்கி இருப்பதால் நீர் சுத்தமாக மாறி இருக்கிறது. இத்தாலியில் டால்பின்கள் கடற்கரையின் அருகில் வரை வந்து செல்கின்றன.
தாய்லாந்தில் குரங்குகள் சாலையில் துள்ளிக் குதித்து விளையாடி மகிழ்கின்றனர். அதேபோல் ஜப்பானில் மான்கள் ஆங்காங்கே சுதந்திரமாய் துள்ளிக்குதித்து உலா வருகின்றன. உலகிலேயே அதிக காற்று மாசை ஏற்படுத்தும் பட்டியலில் முதல் நாடாக இருக்கும் சீனாவில் தற்போது துளி அளவு கூட காற்றுமாசுபாடு இல்லை. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருந்த பூமி மீண்டும் உயிர் பெற்று எழுந்து வருகிறது. இதற்கெல்லாம் காரணம் மனிதர்கள் வீட்டிற்குள் முடங்கி இருப்பதால் தான் இப்போது கூறுங்கள் உண்மையான வைரஸ் கொரோனோவா இல்லை மனிதர்களா என்று இந்த பதிவானது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.