செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சாதிய தீண்டாமையால் கோயிலுக்குள்ள விடல. கோயிலுக்குள்ள விடாத இந்த கொடுமையை தகர்த்து உள்ளே போனது எப்படி திசை திருப்புவதாக இருக்கும்.  ஒரு இடத்தில் கயிறு கட்டி இருக்கு. அந்த கயிறை அறுத்து உள்ள போற செயல் எப்படி திசைதிருப்பல் ஆகும் ?

நீங்க முதல்வர் கிட்ட கேட்க வேண்டிய கேள்வி. அந்த செயலை செய்த மாவட்ட ஆட்சியர் மேல, காவலர் மேல திசை திருப்புனாங்க என  எப்படி சொல்லுறீங்க ? முதல்வர் மவுனமாக இருக்க காரணம் என்ன ? மலத்தை கறைத்தவன், கோவிலுக்குள்ளே போகாதான்னு சொன்ன ஜாதி இருக்குலா… அவனுடைய ஓட்டு உங்களுக்கு விழாம போயிரும்னு தான இப்படி பண்றீங்க.

இப்ப நாங்க எதிர்த்து, அதை கண்டித்து அறிக்கை விடுறோம்ல. நீ ஓட்டு போட்டா போடு, போடலைனா போ என… அப்போ நீங்க தீண்டாமை ஒழிப்புக்கான பொறுப்பில் இருந்துகொண்டு,  முதலில் அறிக்கை நீங்க தான விட்டு இருக்கணும். மாவட்ட ஆட்சியரையும், காவலரையும் கூப்பிட்டு பாராட்டி இருக்கணுமா ? இல்லையா ? நீங்க ஒரு அறிக்கை விட்டிருந்தா  சரியா இருந்து இருக்கும். இந்த கேள்வியே வந்திருக்காது.

மலத்தை கலந்தவரை இன்னும் கைது செய்யாதது யார் பொறுப்பு ? காவல்துறை யார் கையில் இருக்கு ? அவரை கேளுங்க? ஊடகவியலாளர்கள் அண்ணன்கிட்ட கேட்கறதுக்கு பதிலா, நான் தான் அந்த  செயலோடு கரைந்து நிற்கிறேனே.. நான் கண்டிக்கிறேன். நடவடிக்கை எடுக்க சொல்கிறேன். அப்ப நடவடிக்கை எடுக்காதவரிடம் கேள்வி கேளுங்க. ஏன் எடுக்கவில்லை என்று மக்களிடம் போய் சொல்லுங்கள் என தெரிவித்தார்.