சாதிமறுப்பு திருமணம் செய்த இளமதியை கடத்திய ஜாதி வெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.
கடந்த 9ம் தேதி சேலம் மாவட்டம் கொளத்தூரில் இளமதி – செல்வன் என்ற காதல் ஜோடி சுயமரியாதை திருமணம் செய்துகொண்டது.இதனால் ஆத்திரமடைந்த ஜாதி வெறிக் கும்பல் திருமணம் செய்து நடத்தி வைத்த திராவிடர் விடுதலை கழகத்தின் நிர்வாகியும் , திருமணம் செய்துகொண்ட செல்வனையும் கடுமையாக தாக்கி இளமையை கடத்திச் சென்றனர்.இதுகுறித்து போலீசார் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியநிலையில் 5 நாட்களாகியும் இளமதி எங்கே இருக்கிறார் ? என்று இன்னும் கண்டுபிடிக்காத ஒரு அவலம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாராளுமன்றத்தில் தர்மபுரி திமுக மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் குரல் எழுப்பினார்.
இதையடுத்து #இளமதி_எங்கே என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இதில் சாதி வெறியர்கள் , சாதி மறுப்பு திருமணத்திற்கு எதிராக நிற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
#இளமதி_எங்கே
மனிதர்களை நேசிக்க தெரிந்த சாதி மயிரை நேசிக்காத எங்கள் இளமதி எங்கே? pic.twitter.com/wXDOUb1Yne— எழில் மறவன் (@ezhil_maravan) March 14, 2020