பிரதமர் நரேந்திர மோடியின் படம் எங்கே…? சாலை மறியலில் ஈடுபட்ட பா ஜனதாவினர் கைது… பெரும் பரபரப்பு…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் நகராட்சியில் மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் குடிநீர் திட்ட பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்நிலையில் மத்திய அரசின் திட்டப்பணி பூமி பூஜை நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி படம் இடம்பெறவில்லை என கூறி அங்கு வந்த பாஜகவினர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து நகராட்சி அலுவலகம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாதததை  தொடர்ந்து போலீசார் பா.ஜனதாவினரை கைது செய்துள்ளனர்.

Leave a Reply