ஆளுங்கட்சி கூட்டம் போனால் எவர் சில்வர் குடம்…… வைரலாகும் வீடியோ…!!

அதிமுக கூட்டத்திற்கு வந்த பொதுமக்களுக்கு எவர் சில்வர் குடம் கொடுப்பதை போன்ற வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது.

நாடு முழுவதும் 7 கட்டமாக நடக்கும் மக்களவை தேர்தல் வரும் 11_ஆம் தேதி தொடங்குகிறது . தேர்தல் நடத்தை விதிகள் அமலில் வந்த நாள் தொடங்கி தேர்தல் பறக்கும் படையினர் நாடு முழுவதும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர் . உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பணம் மற்றும் பொருட்களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்கின்றனர்.

மேலும் தேர்தல் பறக்கும் படையினரின் தீவிர கண்காணிப்பையும் மீறி பல்வேறு இடங்களில் மக்களவுக்கு அரசியல் கட்சியினர் பணம் மற்றும் பொருட்களை வழங்கி வருகின்றனர். இதில் சில நேரங்களில் பறக்கும் படையினரிடன் சிக்கி விடுகின்றனர் .இல்லை என்றால் பொருட்கள் வழங்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி விடுகின்றது. அப்படி ஒரு சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது.அப்படி வெளியாகிய வீடியோ_வில் ஆளும் அதிமுக கட்சியினர் பிரச்சார கூட்டத்திதிற்கு வந்த பொது மக்களுக்கு எவர் சில்வர் குடம் கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகின்றது