காதலியுடன் திருமணம் எப்போது…? மாதத்தை அறிவித்த விஷ்ணு விஷால்…!!

காதலியுடன் உங்கள் திருமணம் எப்போது என்ற கேள்விக்கு விஷ்ணு விஷால் பதில் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். இதைத்தொடர்ந்து பலே பாண்டியா, முண்டாசுப்பட்டி, ராட்சசன் உன்கிட்ட பல படங்களில் நடித்து விஷ்ணு விஷால் பிரபலமானார். மேலும் இவர் கே.நட்ராஜின் மகளை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் சில காலங்களில் அவர்கள் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர்.அதன் பிறகு விஷ்ணு விஷால் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை  காதலிப்பதாக கூறினார். அதனை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்நிலையில்,ஜுவாலா கட்டாவுடன் உங்கள் திருமணம் எப்போது என்று பலர் விஷ்ணு விஷாலிடம் கேள்வி எழுப்பி  வந்தனர். இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த விஷ்ணு விஷால், எங்களது திருமணம் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்றும் தேதி கூடிய விரைவில் தெரிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.