போலி செய்திகளை கண்டறிய வாட்ஸ் அப் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
வாட்ஸ் அப் இன் முக்கிய பிரச்சனையாக இருப்பது போல் செய்திகள் பரவுவது. இதனை தடுக்க வாட்ஸ் அப் நிறுவனம் பல மாறுதல்களைக் கொண்டு வருகிறது. பயனாளர்களின் தேவைக்கு ஏற்பவும் பயன்பாட்டுக்கு எளிதாகவும் அவ்வப்போது அப்டேட் கொடுத்து வருகிறது.இந்நிலையில் வதந்தியை தடுக்க புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது வாட்ஸ் அப் . வதந்தி என சந்தேகிக்கும் குறிப்பிட்ட தகவலை 91 96 43 00 08 88 என்ற எண்ணிற்கு அனுப்பலாம் என்றும் , அதற்கான பணியமர்த்தப்பட்டுள்ள பணியாளர்கள் அந்தத் தகவல் உண்மையானதா தவறானதா உள்நோக்கத்துடன் கூடியதா என்பது உள்ளிட்ட விளக்கங்களை அனுப்பி வைப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் குறுந்தகவல் , படங்களையோ அல்லது படக்காட்சிகளை அனுப்பி விளக்கம் பெற முடியும் என whatsapp தெரிவித்துள்ளது. தனியார் தொழில் முனைவு நிறுவனத்தின் உதவியுடன் தகவல் சரிபார்ப்பு சேவையை whatsapp வழங்க உள்ளது. எனினும் தற்போது இந்த வசதி ஆங்கிலம் , ஹிந்தி , தெலுங்கு , மலையாளம் மற்றும் வங்காளம் ஆகிய ஐந்து மொழிகள் மட்டுமே வழங்கப்படும் என்றும் , பின்னர் மற்ற மொழிகளுக்கு விரிவாக்கம் செய்ய என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் இவ்வசதியை whatsapp கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது .