Whatsapp – இன் செம அப்டேட்ஸ்…. இனி இதெல்லாம் பண்ணலாம்…. பயனர்கள் மகிழ்ச்சி….!!!!

உலக அளவில் தகவல்களை பரிமாறிக் கொள்ள உதவும் முதன்மையான செயலியாக வாட்ஸ் அப் உள்ளது.  எனவே உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். இதில் வெறும் குறுச்செய்திகள் மட்டுமின்றி, வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் சேட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மற்றும் தனிநபர் மட்டுமல்லாது குழுவிலும் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் வசதிகள் உள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புதுப்புது வசதிகளை தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் பயனர்களின் பிரைவசிக்கான அப் டேட்களும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் நமது டிபி, லாஸ்ட் சீன் ஆகிய அம்சங்களை யார் யார் பார்க்கலாம் என்று நாமே தீர்மானிக்க முடியும். இதுவரை ஒட்டுமொத்தமாக நம் contact இல் இருக்கும் அனைவரும் பார்ப்பது அல்லது யாரும் பார்க்க முடியாதபடி செய்வது என ஒரே ஆப்ஷன் மட்டுமே இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *