வாட்ஸ் அப் வச்சு இருக்கோம் ”தரமற்ற மின்கம்பம் இல்லை” அமைச்சர் விளக்கம் …!!

தரமற்ற மின்கம்பங்கள் இல்லை , மின்கம்பம் தொடர்பான பிரச்சனையை சரி செய்ய வாட்ஸ் அப் குரூப் வைத்துள்ளோம் என்று மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.இது மின்சாரத்துறையின் கவனக்குறைவு என்று பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், முகலிவாக்கத்தில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் பள்ளம் தோன்றியதால் தெரியாமல் விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை சிட்லபாக்கம் லாரி மோதியதில் மின்கம்பம் சேதம் அடைந்தது விபத்து ஏற்பட்டதே தவிர அது தரமற்ற மின்கம்பத்தால் அல்ல. மோதிய லாரியை கண்டறிய சிசிடிவி காட்சிகள் உதவியுடன் விசாரணை நடக்கிறது.மின் கம்பிகள் தரமற்றவை என்பதே கிடையாது. அனைத்து மின் கம்பங்களும் தரமாகவே உள்ளன என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் , மின்கம்பம் பழுது , மின்சார வாரியம் கவனிக்கவில்லை என்ற செய்தி தவறானது.பொதுவாக மின்சார வாரியத்தில் இதுபோன்ற புகார்கள் எங்கிருந்தாலும் உடனடியாக அந்தத் துறையின் அதிகாரிகள் அங்கு சென்று சரி செய்கின்றனர். இது போன்ற புகார்கள் உடனடியாக சரி செய்து வருகின்றோம்.அந்தந்த மாவட்டத்திலேயே வாட்ஸ்அப் குரூப்பில் வைத்துள்ளோம் மக்கள் புகார் அளிப்பதற்கு எதுவாக.முதலமைச்சரின் உத்தரவு பெயரில் மின்வாரியம் சார்பில் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.இதே போல சேதமடைந்த  மின்கம்பங்கள் இருந்தால் பொதுமக்கள் மின்வாரியத்திற்கு தகவல் அளிக்கவேண்டும். பழுதடைந்த 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.