ராகுல் சொல்லுறது 100% உண்மை… துரை வைகோ செம சப்போர்ட்… பாஜகவுக்கு செம பதிலடி …!!

இந்தியாவை மொழி, ஜாதி, மத ரீதியிலாக பிளவுபடுத்தும் நோக்கத்தில் பாஜக செயல்படுகின்றது என்று ராகுல் காந்தி கூறியது குறித்து கருத்து தெரிவித்த  துரைவைகோ, அவர் கூறிய அறிக்கையும் சரி, இன்னைக்கு அவருடைய நடைபயணமே இந்தியாவின் ஒற்றுமையை நிலைநிறுத்த தான். அவர் கூறும் கருத்து நூற்றுக்கு நூறு உண்மையான கருத்து. உங்க எல்லாருக்கும் தெரியும்.

சமீபத்தில் கோவையில் ஒரு குண்டு வெடிப்பு நடந்தது. அது தீவிரவாதிகளுடைய செயல், கண்டுபிடிச்சிட்டாங்க. அப்போ இங்க இருக்கிற பாஜக தலைமை என்ன சொன்னாங்கன்னா ? இது தமிழக போலீஸ் உளவுத்துறையின் கவன குறைவு. தமிழக அரசாங்கத்தினுடைய கவனக்குறைவு, தமிழக போலீஸ் ஒழுங்கா செயல்படாததால்  தான் இந்த வன்முறை நடக்குது. இந்த மாதிரி எல்லாம் குற்றம் சொல்லி இருந்தாரு. இன்னைக்கு அதையே நான் சொல்றேன்.

கர்நாடக மாநிலத்தில் பெங்களூர்ல ஒரு விபத்து நடந்திருக்கு,  ஒரு குண்டுவெடிப்பு நடந்திருக்கு. இதே நேஷனல் இன்வேஸ்டிகேஷன் ஏஜென்ட் தான் அங்கேயும் விசாரிச்சுட்டு இருக்காங்க. இதில் வேடிக்கை என்னன்னா ? இதில் சம்பந்தப்பட்ட தீவிரவாதி நபர்,  இதுக்கு முன்னாடி அதே கர்நாடக மாநிலத்துல ஷிமோகா என்ற இடத்துல ஒத்திகை பார்த்திருக்காரு.

பெங்களூரை பொறுத்த வரைக்கும் 2020-ல ஒரு கலவரத்தில் அவர் ஈடுபட்டு இருக்காரு. ஒருத்தர இப்படி இரண்டு வருஷமா தொடர்ந்து இந்த மாதிரி செயல்களை ஈடுபட்டு இருக்கிறவரை  ஏன் கர்நாடகாவை ஆளுகின்ற பாஜக அரசு ஏதும் செய்யல என விமர்சனம் செய்தார்.

Leave a Reply