”விக்ரம்” படத்திற்காக கமல் செய்த காரியம்…. அசந்துபோன லோகேஷ் கனகராஜ்…. என்னன்னு பாருங்க….!!!

”விக்ரம்” படத்திற்காக கமல் செய்த காரியம் கண்டு லோகேஷ் கனகராஜ் அசந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”விக்ரம்”.

 

ஜூன் 3ஆம் தேதி ரிலீஸாகும் இந்த படத்துக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திலிருந்து ”பத்தல பத்தல” பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

இந்நிலையில், இந்த படத்திற்காக கமல் செய்த செயலைப் பார்த்து லோகேஷ் கனகராஜ் வியப்படைந்துள்ளார். அதன்படி, இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ஒன்றிருக்கு கமலின் பைசெப்ஸ் தெரிய வேண்டும் என்று இயக்குனர் கேட்டாராம். அதற்கு கமல் நள்ளிரவு 2 மணிக்கு தனியாக போய் 5 நிமிடம் புஷ் அப் எடுத்தாராம். இதை பார்த்த லோகேஷ் கனகராஜ் இந்த வயதிலும், உடல்நிலை சரியில்லாத நேரத்திலும் கமலின் கடுமையான உழைப்பு கண்டு மிரண்டு போனாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *