“இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகளை நீக்கியதற்கான காரணம் என்ன…?” வெளியான தகவல்….!!

இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றதற்கான காரணம் குறித்து தற்போது பார்க்கலாம். ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்கியதால் இந்திய பொருளாதாரம் பாதிக்குமோ என்ற கேள்வி சிலர் மத்தியில் இருக்கலாம். கடந்த 2016-ம் ஆண்டு 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், 2019 -ம் ஆண்டு 2000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை முழுமையாக நிறுத்திக் கொண்டது. 2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் மக்கள் மத்தியில் குறைந்த நிலையில் தற்போது 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே மக்கள் மத்தியில் பெரிய அளவில் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இல்லாத நிலையில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது. இதனால் பொருளாதாரம் பாதிப்படையாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். மேலும் வரியை மறைக்க மற்றும் கருப்பு பணத்தை சேர்த்து வைப்பவர்கள் பெரும்பாலும் 2000 ரூபாய் நோட்டுகளை தான் சேர்த்து வைத்திருப்பார்கள். கருப்பு பணத்தை வைத்து இருப்பவர்களுக்கு தான் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக வந்த அறிவிப்பு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கும்.

Leave a Reply