“8வழி சாலை”மத்திய அரசின் நிலைப்பாடு என்ன..?உச்சநீதிமன்றம் கேள்வி..!!

8  வழி சாலை தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் சேலம் to சென்னை எட்டு வழி சாலை அதிவேக சாலை என சட்டமன்றத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். மேலும் 8 வழி சாலை அமைக்க மனமுவந்து நிலங்களை அளிக்குமாறு அவர் தெரிவித்தார். ஆனால் 8 வழிச்சாலைக்கு  தொடர் எதிர்ப்புகளை தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அடுத்தடுத்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

Image result for supreme court india

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் 8 வழி சாலை தொடர்பாக நடத்தப்பட்ட வழக்கின் விசாரணையில், எட்டு வழி சாலை தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்றும்  எத்தனை பேர் 8 வழி சாலைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் எத்தனை பேர் வழக்குத் தொடுத்தார்கள் என்றும் கேள்வி எழுப்பியதோடு, உச்சநீதிமன்றம் நாளைக்குள் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

Image result for supreme court india

இதையடுத்து நிலங்களை கையகப்படுத்தினால் தான்  சுற்றுச்சூழல் தெடர்பான அனுமதிகளை  பெற முடியும். ஆகையால், நிலங்களை கையகப்படுத்த முறையான அனுமதி அளிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் எட்டு வழி சாலை சார்பு அலுவலர் தரப்பிலிருந்து மேல்முறையீடு மனு அளிக்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் வழக்கை ஜூலை 31ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.