திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் பேசிய மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, தமிழ் ஒரு மூத்த மொழியாம் நட்டாவுக்கு. தமிழ் மூத்த மொழி என சொல்லுறீங்களே.சமஸ்கிருதம் இல்லாத எல்லா மொழிக்கும் 20 கோடி ரூபாய் வருஷத்துக்கு செலவு. சமஸ்கிருதத்திற்கு மட்டும் 300 கோடி ரூபாய். இந்தியாவில் சமஸ்கிருதம் பேசுகிறவன் எண்ணிக்கையே 50 ஆயிரத்தை தாண்டாது. ஒரு 50 ஆயிரம் பேர் பேசுகின்ற சமஸ்கிருதத்திற்கு 300 கோடி ரூபாய் மொழி வளர்ச்சிக்கு…

தமிழ் செம்மொழி என நட்டா இங்க வந்து பேசுகிறாரே அந்த மொழிக்கு என்ன கிழிச்சிட்டிங்க நீங்க. சமூக நீதியாக இருந்தாலும்,  தமிழாக இருந்தாலும் எங்களுடைய கலாச்சார பண்பாடு எதுவாக இருந்தாலும் எங்களை நீங்கள் ஏற்றுக் கொள்ளாமல் நீதிமன்றத்துக்கு போகிறீர்கள், எதிர்த்துப் பேசுகிறீர்கள். எங்களுடைய  பண்பாடு வேறு, சம்ஸ்கிருத பண்பாடு வேறு, தமிழ் பண்பாடு வேறு என்று சொல்லி…

எல்லா துரோகத்தையும் செய்துவிட்டு, மேட்டுப்பாளையம் வந்து நாங்க தமிழ் செம்மொழி என்பதை ஏற்றுக் கொள்கின்றோம்.  இது பழைமையான  கலாச்சாரம் என சொல்லுறீங்க. எங்க கலாச்சாரம் என்ன தெரியுமா ?  இரண்டு கலாச்சாரத்துக்கும் இடையேயான மோதலை தமிழ்நாடு இப்போது அல்ல 2000 ஆண்டு காலமாக பார்த்துக் கொண்டு இருக்கின்றது.

2000 ஆண்டுகளுக்கு முன்னாள் தமிழ்நாட்டில் பெண்கள் படித்து இருந்தார்கள். ஆனால் 200 வருஷத்துக்கு முன்னாடி படிக்க முடியவில்லையே என்ன காரணம் ? இடையில் வந்த ஆரியம். இடையில் வந்த நீ. இடையில்   வந்த சமஸ்கிருதம். அந்த சமஸ்கிருதம் தான், அந்த ஆரியம் தான் இன்றைக்கு வேறு ஒரு வடிவில் ஆர்.எஸ்.எஸ் ஆக, பிஜேபி ஆக இருந்து கொண்டிருக்கிறது என்றால் இது ஒரு தத்துவ போர் என பேசினார்.