செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, உயர் நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கவுரி நியமனம் சரிதான் என்று உச்சநீதிமன்றம் நிலைப்பாடு எடுத்துவிட்டால் நாட்டுக்கு நல்லதல்ல. ஒன்றிய அரசின் ஏற்பாட்டால்தான் இது நடைபெற்று இருக்கிறது. அதனால் உச்சநீதிமன்றத்தால் ஒன்றும் செய்ய முடியாது. உச்சநீதிமன்றத்திற்கும் – ஒன்றிய அரசிற்கும் நிறைய முரண்பாடு இருக்கிறது. அவர்கள் இரண்டு பேருக்கும் இடையே நிறையா முரண்பாடு இருக்கிறது. விக்டோரியா கவுரி போன்ற நபர் உயர்நீதிமன்றத்திற்கு வரக்கூடாது.

இது அரசியலமைப்பு சட்டத்துக்கு சரிவராது என்ற அடிப்படையில் உச்சநீதிமன்றம் முடிவு எடுத்தால்தான் இதற்கு ஒரு விடை கிடைக்குமே தவிர, வேறு ஏதும் பண்ண முடியாது. இதற்க்கு எதிராக ஆர்ப்பாட்டமோ,  போராட்டமோ நடத்தப் போவது கிடையாது,  நடக்க போறது கிடையாது. இந்த அரசு இப்படித்தான் இருக்கப் போகிறது. 2024 இல் ஒரு மாற்றம் ஏற்பட்டால், அன்றைக்கு இருக்கின்ற ஒன்றிய அரசும், அன்னைக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கின்ற கொலிஜியமும்… இந்த மாதிரி வராமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கலாம்.

இப்படிப்பட்ட நியமனத்தில் வருகின்றவர், அவர்களின் சித்தாந்தத்தினால்  நீதிபதி என்ற பொறுப்பை வைத்துக்கொண்டு, மேற்கொண்டு தவறுகள்  செய்யக்கூடாது. இதுவரை இப்படி இருந்து விட்டார். நீதிபதி ஆன பிறகு கூட,  அவரின் நிலைப்பாடு…  இதே போக்கு இருக்கக்கூடாது. தொடர்ந்து விக்டோரியா கவுரி செயல்பாடு இருந்தது என்றால் உச்சநீதிமன்றம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் என எங்களுக்கு சின்ன நம்பிக்கை இருக்கின்றது என தெரிவித்தார்.