“ரயிலில் டிக்கெட் எடுக்காமல் போனால் என்ன ஆகும்”…? கண்டிப்பாக இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க….!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவாக இருப்பதோடு நீண்ட தூர பயணத்திற்கும் வசதியாக இருக்கிறது. அதோடு இந்திய ரயில்வே பயணிகளுக்காக பல்வேறு விதமான சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால்தான் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இந்நிலையில் ரயில் பயணத்தின் போது டிக்கெட் எடுக்காமல் சென்றால் என்ன பிரச்சனை வரும் என்பது குறித்து பார்க்கலாம். ரயிலில் செல்லும்போது டிக்கெட் எடுப்பது மிகவும் அவசியம்.

ஏனெனில் உங்களிடம் டிக்கெட் இல்லை என்றால் டிக்கெட் பரிசோதகர் அபராதம் விதிப்பார். சில சமயங்களில் சிறை தண்டனை கூட கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே ரயிலில் செல்லும்போது டிக்கெட் எடுப்பது கட்டாயம். மேலும் ஒரு வேளை உங்கள் ரயிலின் கட்டணம் 100 ரூபாயாக இருந்தால் டிக்கெட் எடுக்காமல் செல்லும்போது 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ரயில் டிக்கெட் கட்டணத்தை விட அபராத கட்டணம் தான் அதிகம். எனவே ரயிலில் செல்லும்போது கண்டிப்பாக அனைவரும் டிக்கெட் எடுத்துவிட்டு தான் செல்ல வேண்டும்.

Leave a Reply