தோனிக்கு என்ன ஆச்சு ? வைரலாகும் தகவல் உண்மை தானா ? தீயாய் பரவும் செய்தி…!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மஹேந்திரசிங் தோனி மூட்டு வலியால் சிகிச்சை பெற்று வருவதாக செய்தி வைரலாகி வருகின்றது. 

”தல” – ”கேப்டன் கூல்” என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் மொச்சும் அளவிற்கு இந்த சொல்லுக்கு வீரியம் உண்டு. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்த கேப்பிட்டனும் செய்யாத சாதனையை மகேந்திர சிங் தோனி நிகழ்த்தியுள்ளார். மூன்று வகையான ஐசிசி தொடர்களை வென்று காட்டி, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் வீட்டில் ஒருவரை போல,பட்டிதொட்டியெங்கும் கொண்டாடும் முத்திரை பதித்த கேப்டன் என்று சொன்னால் அது எம் எஸ் தோனி தான்.

இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து அவர் தற்போது ரிட்டையர்டு ஆனாலும், ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு களமிறங்கி விளையாடி வருகிறார். இன்றும் கூட அவருக்கான ரசிகர் பட்டாளம் இந்தியா முழுவதும் அல்ல, உலகம் முழுவதுமே இருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும்.

மஹேந்திரசிங் தோனி ட்விட்டர்,  இன்ஸ்டாகிராம் போன்ற சோசியல் மீடியாவில் மற்றை கிரிக்கெட் வீரரை போல ஆக்டிவாக இல்லை என்றாலும் கூட தோனி தற்போது என்ன செய்கிறார் ? எங்கு இருக்கின்றார் ? என்ற செய்திகள் உலாவிக்கொண்டு  தான் இருக்கும்.தோனி குறித்து வெளியான செய்திகளின் தன்மை உணர்ந்து, அதனை ரசிகர்கள் வைரலாகி  கொண்டாடுவார்கள்.

தற்போது அப்படி உருவான செய்தி தான் இந்தியா முழுவதும் வைரலாகி வருகிறது. அது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மகேந்திர சிங் தோனி மூட்டு வழியால் அவதிப்பட்டு வருவதாகவும்,  இதற்காக தற்போது அவர், சிகிச்சை எடுத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. அவரின் சொந்த மாநிலமான ராஞ்சி-இல் இருந்து  70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள சிங் சேர்வார் என்ற நாட்டு மருத்துவரிடம் மகேந்திர சிங் தோனி சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்தி பரவியுள்ளது.

இதற்காக தோனி  ரூபாய் 40 மட்டுமே கட்டணம் செலுத்தி வருவதாக கூறப்படு, இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றது. இந்த செய்தியை அறிந்த கோடிக்கணக்கான ரசிகர்கள், தோனிக்கு மூட்டு வலி, சிகிச்சை  உண்மையாக இருக்கும் பட்சத்தில் மகேந்திர சிங் தோனி மீண்டு வர வேண்டும் என்று அவருக்காக வேண்டிக்கொண்டு இருக்கின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *