கீர்த்தி 20 படத்தின் டைட்டில் என்ன தெரியுமா ?

கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் புதிய படத்திற்கு படக்குழு டைட்டில் வைத்து டைட்டில் புரமோவை  வெளியிட்டுள்ளது . 

தமிழகத்தில் தனக்கென தனிக் கால்தடம் பதித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ் . இவர் தமிழகத்தின் முன்னணி நடிகர்களான விஜய் , சூரியா , விஷால் , சிவகார்த்திகேயன் , தனுஷ் உள்ளிட்ட  பல நடிகர்களுடன் நடித்துள்ளார் . மேலும் , கடந்த ஆண்டு இவர் தானா சேர்ந்த கூட்டம், நடிகையர் திலகம், சீமராஜா, சாமி 2, சண்டக்கோழி 2, சர்கார் போன்ற பல படங்களில் நடித்துள்ளார் . இப்படங்களின் மூலம் அவருக்கு  நல்ல வரவேற்பு கிடைத்தது.

Image result for miss india movie keerthy suresh

குறிப்பாக , சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமான ‘நடிகையர் திலகம்’ சூப்பர் ஹிட்டானது. மேலும் , இந்த படத்திற்காக இவர் தேசிய விருதுக்கு தகுதி பெற்றுள்ளார் . இந்நிலையில் இவர்  தற்போது நடித்து வரும் கீர்த்தி 20 படத்திற்கு  ‘மிஸ் இந்தியா’ என பெயர் வைக்கப்பட்டு , டைட்டில் புரமோ வெளியிடப்பட்டுள்ளது . மேலும் , நடிகையர் திலகம் படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, இப்படம் உருவாகி வருவதால் இப்படம் மீது அதிக எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது .