அதிர்ச்சியடைந்த நாக சைதன்யா….. சமந்தா கூறியது என்ன…??

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் சூப்பர் டீலக்ஸ் படம். இப்படம் வருகிற மார்ச்29-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் விஜய் சேதுபதி  இந்த படத்தில் திருநங்கையாக நடித்துள்ளார்.மேலும் இப்படத்தில் சமந்தா, ரம்யாகிருஷ்ணன், காயத்ரி, மிஷ்கின், ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Related image

இந்நிலையில் சமந்தா கதாபாத்திரம் வில்லியாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சமந்தா “சூப்பர் டீலக்ஸ்” படத்தில் நான் நடித்துள்ள கதாபாத்திரம் குறித்து என்   கணவரிடம் சொன்னபோது அவர் என்னை அதிர்ச்சியாக பார்த்தார் என்று கூறியுள்ளார்.

Image result for சமந்தா ‘சூப்பர் டீலக்ஸ்

மேலும் விஜய் சேதுபதியின் திருநங்கை தோற்றம் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் சர்ச்சை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் தணிக்கைக் குழுவுக்கு அனுப்பப்பட்ட பொது  இந்த படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ஆரண்ய காண்டம் படத்திற்கும் ‘ஏ’ சான்றிதழே கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.