முகக் கவசம், கிருமி நாசினிகள் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் என்ன? அரசுக்கு நீதிமன்றம் கேள்வி?

தமிழகத்தில் முகக் கவசம் மற்றும் கிருமி நாசினிகள் அதிக விலைக்கு விற்கப்படுவதை தடுக்க கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழகத்தில் முகக் கவசம் மற்றும் கிருமி நாசினிகள் விலை உயர்வை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இதுகுறித்து தமிழக பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 147ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமா பரவி வரும் நிலையில் அத்திலிருந்து தற்காத்து கொள்ள தேவையான முக கவசம் (மாஸ்க்), கையுறை (க்ளவுஸ்) மற்றும் கைச்சுத்திகரிப்பான் (சானிட்டைஸர்) ஆகியவை தற்போது அதிக அளவில் விற்பனையாகி வருகிறது.

இந்த இந்த பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.இதனையடுத்து முகக் கவசம், கையுறை மற்றும் சானிடைசர் ஆகியவற்றை அத்தியாவசியப் பொருள்களாக கடந்த வாரம் மத்திய அரசு அறிவித்தது. மேலும் இவற்றிற்கு பேரிடர் மேலாண்மை விதிகளையும் அமல்படுத்தியுள்ளது.

இதன்மூலம் இந்த பொருட்கள் எந்த விதமான தட்டுப்பாடும் இல்லாமல் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும் தமிழகத்தில் இதனை அதிக விலைக்கு விற்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது. இதனால் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.