தங்கள் குழந்தைகளுக்காக தாய்மார்கள் ஆரத்தி எடுப்பது வழக்கம். பார்வை படம் என்று சுற்றி போடுவார்கள். மகாராஷ்டிரா மட்டும் கோவா பகுதியில் “பாய் தூஜ்” என்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகையின் போது பெண்கள் தங்களது சகோதரரின் நீண்ட ஆயுளுக்காகவும், நல்ல வாழ்க்கைக்காகவும் பிரார்த்தனை செய்வதுண்டு. இந்நிலையில் ஒரு இளம் பெண் தான் வளர்க்கும் செல்லப் பிராணியான அணிலுக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை செய்யும் வீடியோ இணையதளத்தில் வைரலாகியது.

அந்தப் பெண் தனது அணிலுக்கென்று தனி வலைதள பக்கத்தை உருவாக்கி, “பாய் தூஜ் சிறப்பு பதிப்பு” என்று வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பெண் தனது அணிலுக்கு ஆரத்தி எடுத்து திலகமிட்டுள்ளார். சகோதரர் பாசத்துடன் அந்த அணிலுக்கு பூஜை செய்வது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.